July 24, 2008

பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த வெற்றி

வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் அளவிற்கு தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருக்கிறது பங்குச் சந்தை.

கடந்த வியாழன் முதல் நேற்று வரை 2,300 புள்ளிகளுக்கு மேல் கூடி முதலீட்டாளர்களை மறுபடியும் சந்தை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தை, அரசியலில் ஜெயித்து பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஒதுங்கி இருக்கிறோமே, நாமும் கலந்து கொள்ளலாமே என்று கச்சா எண்ணெயும் விலை குறைந்து பங்குச் சந்தை பார்ட்டியில் கலந்து கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலர் வரை குறைந்தது. சமீபத்திய அதிகபட்ச விலையான பேரலுக்கு 147 டாலரிலிருந்து, 126 டாலர் வரை வந்துள்ளது. இது, 14 சதவீதம் குறைவு.

திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று தினங்களுமே அரசியலால் பங்குகளின் விலை ஏறியது என்று தான் கூறவேண்டும். அரசியலில் எம்.பி.,க்களின் விலை ஏறியது போல, பங்குச் சந்தையிலும் ஒரு ஏற்றம் இருந்தது ஒரு ஆறுதல் தான். சமீபகாலமாக ஏற்பட்ட பங்குச் சந்தை புண்களுக்கு இந்த ஏற்றம் ஒரு மருந்தானது. சிறிய, நடுத்தர, பெரிய கம்பெனி ஆகிய அனைத்து பங்குகளும் மேலே சென்றன. நேற்று பல பங்குகள் 10 சதவீதத்திற்கு மேலே கூடிச் சென்றது.

குறிப்பாக ஆர்.என்.ஆர்.எல். (அனில் அம்பானியின் கம்பெனி) 24 சதவீதம் மேலே சென்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலைகள் கூடின. அதே சமயம் ஆயில் தயாரிக்கும் கம்பெனியான கெய்ர்ன் இந்தியாவின் விலை குறைந்தது. கடந்த 15 தினங்களாக இந்தக் கம்பெனியின் பங்கு விலை குறைந்து வருவது குறிப்பிடத் தக்கது. அணு உலைகள் அமைப்பதிலும், அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதிலும், செய்வதிலும் முன்பே அனுபவம் வாய்ந்த கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றது.

குறிப்பாக லார்சன் அண்டு டர்போ, என்.டி.பி.சி., பி.எச். இ.எல்., அல்ஸ்டம் புராஜெக்ட்ஸ், டாடா பவர், வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், அரிவா, ஏ.பி.பி., ரோல்டா இந்தியா ஆகியவை. வங்கித்துறை, கட்டுமானத்துறை, மின்சாரத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 838 புள்ளிகள் கூடி 14,942 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 4,476 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

என்ன நடக்கலாம்? இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம்.

அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு



செஞ்சி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, இந்தியத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா அன்னம்புத்தூர் கிராமத்தின் வடக்கில் ஏரியையொட்டி மண்மேட்டின் மீது சிவலிங்கம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. கிராம மக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் ராஜவேலு தலைமையில் ரகு, அழகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்னம்புத்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவலிங்கம் இருந்த மண்மேடு, பழமையான கோவிலின் சிதைந்தப் பகுதி என்பது தெரிய வந்தது. சிதைந்திருந்தக் கோவிலின் அதிட்டானத்தின் குமுத வரியில், தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டைப் படி எடுத்து ஆய்வு செய்ததில், முதலாம் ராஜராஜ சோழனின் 23வது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு செதுக்கியிருப்பதும், இதன் காலம் கி.பி., 1008 என்றும் தெரிய வந்தது.

முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டிலிருந்து, இங்குள்ள கோவில் மூலவரின் பெயர் திருநீதிஸ்வரர் என்பது தெரிய வந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் கிடங்கில் நாட்டைச் சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள திருநீதிஸ்வரர் கோவிலுக்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் கட்டியிருப்பது, இதன் அடித்தளத்தில் உள்ள பெரிய அளவிலான செங்கற்களால் தெரிய வருகிறது. கோவிலின் அதிட்டானத்தில் குமுதவரி மற்றும் தலைப்பகுதியை மட்டும் கருங்கல்லால் கட்டியுள்ளனர். இதன் மேல் செங்கற்களைக் கொண்டு கோவிலின் சுவரை அமைத்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் செங்கல் சுவர் இடிந்து மண்மேடாகி உள்ளது. இந்த மண் மேட்டின் மீதே திருநீதிஸ்வரர் திறந்த வெளியில் காட்சி தருகிறார். கோவிலின் அருகில் புடைப்புச் சிற்பமாக உள்ள வினாயகர் சிலை இந்தக் கோவில் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு, மேலும் ஆதாரமாக விளங்குகிறது.

இக்கோவிலின் மேற்கில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஏழு கன்னியர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் பழமை மற்றும் வரலாற்றை அறிந்து கொண்ட கிராம மக்கள் சிதைந்த நிலையிலுள்ள திருநீதிஸ்வரர் கோவிலை புனரமைக்க தெய்வநாயகம் என்பவர் தலைமையில் திருப்பணிக்குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.

நன்றி: தினமலர்

Yahoo pulls editorial operation out of Chennai

CHENNAI: In a sudden move, Yahoo India has moved its editorial operations out of Chennai. Besides that, it is also learnt that it has terminated a technical support agreement with a software services firm.

The reason for the decision is not known, but sources said that the ten-member team, which contributed editorial content to Yahoo India have been given option to join company’s Bangalore office or exit.

The ten people were employed with a Bangalore-based private news syndicate, which had an office in Chennai.
An employee of Yahoo’s Chennai office confirmed the development. "Yahoo has offered to absorb them into the organisation if they are willing to relocate,” he told The Times of India, on the condition of anonymity.

A spokesperson for Yahoo India said, "Yahoo routinely consolidates its operations for better scale and growth. We currently have three employees at our Chennai office and are relocating them into our other facilities.

The Chennai office was inherited through an acquisition made some time ago and this relocation is part of our integration plan for better scale. "We are aggressively hiring and continue to grow in India,” he further added. The move comes close on heels of Keane India axing 400 jobs across its centres in India.

Chennai gets India's first heart implant training centre

CHENNAI: India has got its first training centre for doctors to learn how to place implants in the heart.


Medtronic, a US-based medical technology service provider, opened its first therapy and procedure training centre (TPTC) in South Asia, in Chennai on Saturday.

A recent report in the premier medical journal The Lancet has said that by 2010, 60 percent of the world's heart patients will be in India. The majority of these patients will suffer from cardiac arrhythmias, heart failure and coronary artery diseases.

Implantable cardiac devices such as pacemakers, de-fibrillators, cardiac therapy devices and coronary stents play a major role in the treatment of these life-threatening conditions.

The process of implanting these cardiac devices is complex and requires highly specialised and technically skilled practitioners.

Launched in 2004, Medtronic has a TPTC mobile unit that travels all over the US, training doctors. It has, so far, trained over 8,500 physicians, nurses and other health professionals via its mobile training unit.

It also has 18 virtual training labs throughout the world, including in the US, central America, Brazil, Argentina, Mexico, half a dozen European countries, China, Japan and Australia.

The Chennai centre, the first in India, is aimed at increasing the number of heart specialists who will know how implant life saving devices in heart patients.

The centre's state-of-the-art classroom and programmer lab will provide training to cardiologists on the programming and follow-up management of these devices. Besides hands-on training, there will also be simulator-equipped class rooms at the centre.

"The therapy and procedure training centre in Chennai is an example of effective training and education used by the company worldwide," Joon Hurh, Medtronic's regional vice president, said on the occasion.

"As more people around the world are in need of implanted medical devices like pacemakers, ICD's and other cardiac devices, so too is the growing need for well-trained clinicians to care for these patients," said Milind Shah, managing director, Medtronic India.

"India has a small number of electro-physiologists (just about 50) who implant high-end devices like CRTs and ICDs to manage heart failures and reduce mortality due to sudden cardiac arrest (SCA)."

"Medtronic is committed to increasing this number in India so that physicians are able to deliver these therapies effectively to more and more patients who need them," Shah said.

The use of simulators is quickly becoming a standard approach to Medtronic training programmes.

Introduced in 2003, Medtronic's virtual labs with state-of-the-art simulator technology provide a safe way for physicians to develop the skills and confidence to implant devices, and for other health professionals to better understand the implantation process, "with life-like implant scenario", the company said.

The simulators are designed to provide a safe environment in which to learn new techniques while avoiding complications and minimising costs.

July 21, 2008

சைகோ பீதியை மறைக்க 'என்கவுன்டர்' திட்டம்

சைகோ பீதியை மறைக்க 'என்கவுன்டர்' திட்டம்

சென்னை: சைகோ கொலையாளி பீதியை மக்களிடத்தில் இருந்து அகற்ற, "என் கவுன்டர்' திட்டத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். தங்களிடம் சிக்கிய டிப் டாப் நபர், சைகோவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னை வடபழனி, அசோக் நகர், குமரன் நகர் பகுதியில் சைகோ வாலிபர், வாட்ச்மேன்கள் மற்றும் பிளாட்பாரத்தில் படுத்து தூங்குபவர்களை தலையில் அடித்து, கொலை செய்து எரித்து விடுகிறார். சைகோ நபரை பிடிக்க வடபழனி, அசோக் நகர் பகுதிக்கு இரவு நேரத்தில் போலீசார் "சீல்' வைத்துள்ளனர்.


உயர் போலீஸ் அதிகாரிகள் இரண்டு நாட்களாக அப்பகுதியில் தொடர் ரோந்து செல்கின்றனர். நேற்றும், நேற்று முன் தினமும் சைகோ கொலையாளி கைவரிசை காட்ட முடியாத அளவுக்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. "சைகோ கொலையாளியை கண்டுபிடிக்க முடியா விட்டாலும் பரவாயில்லை; மேற்கொண்டு கொலைகள் நடைபெறாமல் தடுத்து விட வேண்டும்' என போலீஸ் கமிஷனர் சேகர், அதிகாரிகளுக்கு கண்டிப் பான முறையில் உத்தரவிட்டுள்ளார்.சைகோ கொலையாளி என்ற சந்தேகத்தில் பலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுள், "டிப் டாப்'பாக தென்படும் ஒரு நபர், சைகோ ஆசாமியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது.


கொலை சம்பவம் நடந்த இடங்களில் கொலையாளியின் கைரேகை பதிவாகவில்லை. உண்மையான சைகோ கொலையாளி போலீசாரிடம் சிக்கினால் கூட, கொலை வழக்கிற்கு முக்கிய ஆதாரமான கைரேகை கிடைக்காததால், குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. இதற்கு காரணம், கொலை நடந்த இடத்தில் கைரேகை பதியும் தன்மையுடைய கண்ணாடி போன்ற மென்மையான பொருட்கள் இல்லை. கொலைகள் அனைத்துமே சொரசொரப் பான மண் தரை மற்றும் சாலையை ஒட்டிய பகுதியில் நடந்துள்ளது. இந்த பிரச்னைகளால், சைகோ கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் தகவல் வெளியானது. சைகோ கொலையாளியின் நடமாட்டம் மூன்றாவது நாளாக கட்டுப்படுத்தப் பட்டதால், பீதியில் உறைந்துள்ள அப்பகுதி மக்களின் கவனத்தை திசை திருப்ப, "என்கவுன்டர்' திட்டத்தையும் போலீசார் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

July 20, 2008

Newtonin Moontram Vithi

















Newtonin Moontram Vithi, film is directed by Thai Muthu Selvan and he is from the unit of Director Vincent Selva. This is his debut film, with S J Surya and Sayali (new face).

Big Baloon @ Chennai


தலைமையின் உத்தரவுப்படி - தயாநிதி


நான் முரசொலி மாறனின் மகன். எந்த அரசியல் கட்சியின் சார்பாக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேனோ அந்த கட்சிக்கும், தலைமைக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஜனநாயக கடமை ஆற்றுவேன். தமிழக மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். இன்று (ஜுலை-20) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

கழகத்தின் நலன் கருதியே இதுவரை பத்திரிக்கை பேட்டிகள், அறிக்கைகளைத் தவிர்த்து வந்துள்ளேன். பல பத்திரிக்கை நண்பர்கள் அணுகிய போதெல்லாம் பேட்டியை தவிர்த்து வந்தேன். அண்ணா அறிவுறுத்திய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொஞ்சமும் வழுவாது இது நாள் வரை பொறுமை காத்து வந்தேன். நானும், என்னைச் சார்ந் தவர்களும் சந்தித்து வரும் கசப்பான அனுபவங்கள் வேறு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால், அவர்களின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.

தலைமையின் முடிவுக்கும் கட்டுப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் எனது ஜனநாயக கடமையை ஆற்றுவேன் என்றும், எனது தந்தை முரசொலி மாறன் கடைப்பிடித்த அரசியல் பண்பாடு, நேர்மையை நானும் கடைப்பிடித்து தொடர்ந்து மக்களுக்கு தொண்டாற்றுவேன் என்றும், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் நம்பிக்கை வாக்கெடுப்பில் உள்ள தனது நிலையை அறிவித்திருக்கிறார்.

22ம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எ னது நிலை குறித்து தொலைக் காட்சிகளும், நாளேடுகளும் ஊகத்தின் அடிப்படையில் பல தகவல்களை தந்து வருகின்றன. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கப்போகிறேன். வெளிநாடு போகப் போகிறேன் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து அகில இந்திய அளவில் பல கட்சிகளின் மூத்த தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிலர் நேரில் என்னை சந்தித்துப் பேசினர், அவர்களிடம் எனது நிலையை விளக்கியுள்ளேன்.

இந்த சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எனது நிலைப்பாட்டை தெளிவாக்க விரும்புகிறேன். வாக்கெடுப்பின்போது என்ன முடிவு எடுக் கப் போகிறேன் என்ற ஆர்வமும், ஐயமும் ஏற்பட காரணம் உண்டு. கடந்த ஒரு ஆண்டாக என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் காயப்படுத்த பல வழிகளில் நடைபெறும் முயற்சிகளை நாடறியும். என்னால், திமுகவுக்கும், திமுக தலைமைக்கும், எந்த ஒரு அவப்பெயரும் வந்து விடக் கூடாது என்பதற்காக, எனது இதய வலிகளையெல்லாம் எனக்குள்ளேயே தாங்கினேன்.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு ஆண்டு காலமாக எப்படியெல்லாம் மன உளைச்சல் தரப்பட்டது என்பதை நாடறியும். கழகத்திற்கும், கழகத் தலைமைக்கும் எதிராக நான் செயல்பட்டதில்லை. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் கூட கழகம் ஆதரித்த வேட்பாளர்களையே ஆதரித்து வாக்களித்தேன். காங்கிரஸ், திமுக கூட்டணி உருவானதிலும், கூட்டணி உறவு மேம்பட வும் எனது பங்கு சிறிதளவாவது உண்டு என பலரும் அறிவர்.

என்னைத் தொலைபேசியில் அழைத்து வாக்கெடுப்புக்கு ஆதரவு கோரிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜிக்கும், லாலு பிரசாத் யாதவ், கமல்நாத், ஜி.கே. வாசன், நாராயண சாமி, அமகது படேல் ஆகியோருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் எனது நன்றிகள்.

இடதுசாரிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எனது நிலைப்பாடு என்ன என்று கேட்கப்படுகிறது. நான் காயப்பட்டாலும் கண்ணியம் காப்பேன், களங்கப்படுத்தினாலும் கடமையைச் செய்வேன். காரணம், நான் முரசொலி மாறனின் மகன். எந்த அரசியல் கட்சியின் சார்பாக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேனோ அந்த கட்சிக்கும், தலைமைக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஜனநாயக கடமை ஆற்றுவேன். தமிழக மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

அரசுக்கு எதிராக வாக்களிப்பார் அல்லது வாக்களிக்காமல் நடுநிலை வகிப்பார் என இரு வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலவி வந்த இந்த நிலையில் அரசுக்கு ஆதரவாகவே தமது நிலை என்பதை தயாநிதி மாறன் நூற்றுக்கணக்கான செய்தியா ளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோ ர் மத்தியில், தனது நிலையை தயாநிதி மாறன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Gopika Engagement

Actress Gopika Engaged !


Actress Gopika, got engaged to Dr. Ajilesh, a medical practitioner based in Ireland. The engagement ceromany took place in Gopika’s home town of Trissur on 13th of this month. Actress Bhavana, Ramya Nambeesan, Samyuktha and Kerala State ministers Rajendran and Viswanathan and many others were present on the occasion.

The marriage will take place on July 17, 2008. at the St. Thomas Church in Ernakulam. There will be a reception on July 20, 2008 in Avenue Centre hotel.

Surya - Jothika's Daughter Diya Picture !

Surya - Jothika's Daughter Diya Pic !


The most admired pair in Tamil film Industry Surya - Jo daughter Diya has been noticed recently in an Function. The first Pic of Diya along with Jo ..